ஆமாம் !!!தப்பு பண்ணிட்டேன்… வருத்தப்படும் நாராயணமூர்த்தி!!!!
இன்போசிஸ் நிறுவனம் உலகளவில் மதிப்பு மிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில் தனது குடும்ப உறுப்பினர்களை இன்போசிஸ் தலைமை பொறுப்பில் இருந்து ஒதுக்கி வைத்தது தவறு என்றும், தாம் தவறு செய்துவிட்டதாக வருத்தப்படுவதாகவும் கூறி அதிர வைத்துள்ளார் நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த 2013ம் ஆண்டே வெளியேறிவிட்டார்.இந்த நிலையில் நிறுவனத்தின் எதிர்காலம் வலுவாக வேண்டும் என்று கூறியுள்ள நாராயண மூர்த்தி, குடும்ப உறுப்பினர்களில் தகுதி வாய்ந்தவர் இருந்தால் தவறு இல்லை என்றும்,தற்போது தகுதி இல்லாத நபர்களை தலைமை பொறுப்பில் வைப்பதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பு குறித்து இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கவலை தெரிவித்துள்ளது, வியாபார உலகில் பேசுபொருளாகியுள்ளது.