என்ன பார்த்து.. என்ன பிரயோஜனம்!!! சிம்பிளி வேஸ்ட்!!!!
அமிஞ்சிகரையில உக்காந்து அமெரிக்கா நிலவரம் பத்தி பேசுறது மாதிரி தெரியலாம் ஆனால், அமெரிக்காவின் பாதிப்பு அமிஞ்சிகரையிலும் இருக்கும் என்பார்கள். இதே பாணியில் ரிசர்வ் வங்கி ஒரு ஆலோசனை செய்திருக்கிறார்கள் . சர்வதேச சூழல், இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை உள்ளிட்டவை பற்றி ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை உச்ச அதிகாரம் கொண்டவர்கள் அடங்கிய கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமை ஏற்றார். ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் அடங்கிய இந்த கூட்டம் ரிசர்வ் வங்கி நடத்திய 599வது கூட்டமாகும். கொல்கத்தாவில் நடந்த இந்த கூட்டத்தில், உலகளவில் தற்போதுள்ள நிலை, இந்திய வங்கிகளின் செயல்திட்டங்கள் மற்றும் டிரெண்ட் ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இயக்குநர்களாக உள்ள சதீஷ் கே மராத்தி,ரேவதி ஐயர்,சச்சின் சதுர்வேதி,வேணு சீனிவாசன்,பங்கஜ் ரமன்பாய் படேல்,ரவீந்திர தொலைக்கியா உள்ளிட்டோர் பங்கேற்று அனல்பறக்க விவாதம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் என்ன செய்வது, சாதாரண மனிதனுக்கு இந்த கூட்டத்தால் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல என்ற அளவில் கூட்டம் முடிவுற்றது.