அது எப்படி திமிங்கலம் ??? சந்தானம் ஸ்டைலில் கேள்வி கேட்கும் நெடிசன்கள்!!!
வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் குறித்து இப்போதே பில்டப் தர ஆரம்பித்து இருக்கிறார்கள். அதாவது வரும் பட்ஜெட், அடுத்த 25 ஆண்டுகளுக்கான டெம்ப்ளேட்டாக இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சந்தைய மூலதனத்தை அதிகரிக்கும் நோக்கில் வரிகளில் கச்சிதம்,வளர்ச்சி ஆகியவற்றை குறிவைத்து பட்ஜெட் தயாரிக்கப்படுவதாக மோடியின் இரண்டாம் 5 ஆண்டுகால ஆட்சி கூறினாலும் உண்மை வேறாக உள்ளது. உள்ளூர் நிலவரத்திலேயே ஆயிரத்து 8 பிரச்னைகள் உள்ள நிலையில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க நிதிநிலை குறித்து நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். கொரோனா பெருந்தொற்று நேரத்தில் கூட நிதிநிலையை சீராக்க அதிக மூலதனத்தை பட்ஜெட்டில் அரசு செலுத்த திட்டமிட்டு பணிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த சூழலில் இந்திய பட்ஜெட் எந்தளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பொதுமக்கள் மிகநீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கும் வருமானவரிச் சலுகை உச்சவரம்பு உயர்வு வருமா என்பதே சாதாரணமான சம்பளம் வாங்கும் குடிமகனின் எதிர்பார்ப்பாக உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டாக இது இருக்கும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதற்கு பல தரப்பினரும் இணையத்தில் கேலி செய்வதை பார்க்க முடிகிறது. உண்மையிலேயே ஏதேனும் சிறப்பான பட்ஜெட் அறிவிப்புகள் இருக்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்