கடன் வாங்கி இருந்தா கொஞ்சம் உஷாரா இருக்கணும்!!!!
ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த எஸ் வங்கி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தற்போதுதான் மீண்டு வருகிறது. இந்த சூழலில் அந்த வங்கியின் stressed Asset போர்ட்ஃபோலியோவை ஜேசி பிளவர்ஸ் நிறுவனத்துக்கு எஸ் வங்கி அளித்துள்ளது. அண்மையில் நடந்த ஏலத்தில் ஜேசிபிளவர்ஸ் நிறுவனத்தை எஸ் வங்கி தேர்வு செய்திருந்தது. அதாவது 15 விழுக்காடு போர்ட்ஃபோலியோ மட்டுமே எஸ் வங்கியிடம் இருக்கும், மீத 85% ஐேசி பிளவர்ஸ் நிறுவனம் நிர்வகிக்கும். அதாவது எஸ் வங்கியில் கடன் வாங்கியிருந்தால் அதனை சீராக நிர்வகித்து, கொடுத்த கடனை ஜேசி பிளவர்ஸ் நிறுவனம் வாயிலாக வசூலித்துக்கொள்ள இயலும், சொத்தை நிர்வகிப்பது வங்கிகளுக்கு சமீபகாலமாக பெரிய தலைவலியை ஏற்படுத்தி வரும் நிலையில் 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ட்ஃபோலியோவை ஜேசி பிளவர்ஸ் நிறுவனத்திடம் எஸ் வங்கி அளித்துள்ளது, அந்த வங்கி மீது நன்மதிப்பை ஏற்படுத்தும் என்றும் இது முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.