இனி இதெல்லாம் தப்பில்லீங்கோ!!!!!! டும், டும், டும்,டும்….!!!!!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 15 அம்சங்கள் விவாதிக்க திட்டமிடப்பட்டது. எனினும் நேரமின்மை காரணமாக மொத்தம் 8 அம்சங்கள் பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டது. அதில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. அதாவது தற்போது வரை குற்றமாக கருதப்படும் சில அம்சங்களை இனி தண்டனைக்குறிய குற்றமாக கருத முடியாது என்று ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பது இனி குற்றமாக கருதப்படாது. ஆதாரங்களை அழிப்பதும் குற்றமாக கருதப்படாதாம், மேலும் போதுமான தரவுகளை தராமல் இருப்பதும் குற்றமாக கருத முடியாது என்றும் நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளை பெட்ரோலுடன் கலக்க உகந்த பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18-ல் இருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.