இந்தியாவையும் சிங்கப்பூரையும் ஒப்பிட்ட நாராயண மூர்த்தி!!
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நிஜம் என்பது யாதெனில் இந்தியாவில் அழக்கான சாலைகள், ஊழல், மாசுபாடு என்று அர்த்தம் என்றும்,சிங்கப்பூர் என்றால் சுத்தமான சாலை என்றும் சுற்றுச்சூழல் மாசு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், தலைமை பதவியை ஏற்க வேண்டும் என்றும்,வேறொருவர் வந்து தலைமை ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்றும் தெரிவித்தார். புதிய நிஜத்தை மாணவர்களாகிய நீங்கள்தான் உருவாக்க வேண்டும் என்றும், இளம் தலைமுறையினர் சமூக மாற்றத்தை பற்றி யோசிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.. தேசம்,பொதுமக்கள் மற்றும் சமூகம் சார்ந்தே யோசிக்க வேண்டும் என்றும் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.ஜிஎம்ஆர் கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பேசிய நாராயண மூர்த்தி ஜிஎம் ராவை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள மாணவர்கள் முன்வரவேண்டும் என்றும் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.