கடனாளியாகவே வைத்துக் கொள்ள துடிக்கும் தனியார் வங்கி!!!
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் மெல்ல கரைந்து,தேய்ந்து கட்டெரும்பாகிறது.ஆனால் தனியார் வங்கிகள் அசுர வளர்ச்சி பெற்று வருகின்றனர்.இந்தியாவின் பிரபல நிறுவனமாக திகழும் எச்டிஎப்சி வங்கி அதிக பயன்பாட்டாளர்களிடம் கிரிடிட் கார்டுகளை வாங்க தொல்லை செய்த நிலையில் 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த தடை நீங்கி, மீண்டும் கிரிடிட் கார்டுகளை விநியோகிக்க எச்டிஎப்சி வங்கி ஆர்வம் காட்டி வருகிறது. மாதந்தோறும் இனி 10 லட்சம் பேரை கிரிடிட் கார்டு பயன்படுத்த வைக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைன் வணிகம், ஷாப்பிங் மற்றும் உணவு டெலிவரி ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ள எச்டிஎப்சி வங்கி, கிரிடிட் கார்டுகளுக்கு சிறப்பு சலுகைகளை அளிக்கவும் திட்டமிட்டு உள்ளது. கிரிடிட் கார்டு மூலம் மக்கள் பொருட்களை வாங்குவதில் எச்டிஎப்சி வங்கியின் பங்கு மட்டும் 29% ஆக உள்ளது. ஹோட்டல்கள்,மற்றும் நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ள வங்கி, விரைவில் புதிய வாடிக்கையாளர்களை பிடிக்க கழுகு போல காத்திருக்கின்றனர். இந்த ஒருவருடத்தில் மட்டும் இந்தியர்கள் 30 கோடி பேர் சில்லறை வகையில் கடனாக 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எச்டிஎப்சி வங்கி, அண்மையில் ரூபே நிறுவனத்துடன் இணைந்து கிரிடிட் கார்டில் பரிவர்த்தனை விவரங்களை சேர்த்துள்ளது. இதனால் எச்டிஎப்சி வங்கி கிரிடிட் கார்டு பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.