படித்தொர பாண்டி ஸ்டைலில் வரி வசூலிக்கும் அரசு…
இந்தியாவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தி கடந்த சில காலமாக கடும் சவாலை சந்தித்து வருகிறது. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கவும், அதிக இறக்குமதிகளை கணிசமாக குறைக்கவும் மத்திய அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பல சீன நிறுவனங்கள் தங்கள் பொருட்களை இந்தியாவில் புழக்கத்தில் விடுவதால் அதனால் இந்திய தயாரிப்புகள் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு anti dumping duty என்ற வரியை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் குழாய்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்தால் அதற்கு வரி கட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த வரி இருக்கும் என்பதால் சீன உற்பத்தி இந்தியாவில் ஊடுருவும் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பைப்களுக்கு தரத்துக்கு ஏற்றபடி 114 டாலர் முதல் 3801 டாலராக Anti dumping duty வரி வசூலிக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த முயற்சியை இந்திய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது