நல்ல வருவாய் எதிர்பார்க்காதீங்க…!!!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிதி ஆயோக் அமைப்பு, மத்திய அரசுக்கு திட்டங்கள் சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.இந்த அமைப்பின் உறுப்பினராக ரமேஷ் சந்த் என்பவர் உள்ளார். இவர் அண்மையில் டிஜிட்டல் தளம் ஒன்றில் தனது கருத்தை முன்வைத்தார். அப்போது பேசிய அவர் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது நிலையான வருவாயைத் தருமே தவிற நல்ல வருவாயை தரும் என்று அர்த்தமில்லை என்றார். நல்ல விலை எப்போது கிடைக்கும் என்றால், அது போட்டி ஏற்படும்போது மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அரிசி, கோதுமை உள்ளிட்ட 22 பொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலையை மத்திய அரசு அண்மையில் அளித்துள்ளது. அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களின் அடிப்படை விலையை நிர்ணயித்த பின்னரே விவசாயிகள் பலனடைந்துள்ளதாக கூறிய அவர், விவசாயம் சார்ந்திருக்கும் பால், மீன் வளர்ப்பு மற்றும் தோட்டக்கலைத்துறைகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார். குறைந்தபட்ச ஆதரவு விலை, மிதமான விலை, மற்றும் உண்மையான சந்தை விலை என மூன்றாக பிரிக்க msp உதவுகிறது என்றார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த குழு கூடி, எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு விலை நிர்ணயிக்கலாம் என ஆலோசிக்க இருக்கின்றனர். மத்திய அரசின் கீழ் இயங்கும் நிதி ஆயோக் அமைப்பின் துறை உறுப்பினரே எம்எஸ்பி நல்ல பலன் தராது என்பது போல பேசியுள்ளது விமர்சனங்களை பெற்று வருகிறது.