ஒருமுறை சார்ஜ் போட்டா போதும் 1000 கிலோமீட்டர் போகலாம்!!!
UNSW sydney sun swift7 என்ற சோலார் ஆற்றலில் இயங்கும் கார் புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் மையத்தின் மாணவர்கள் இணைந்து இந்த காரை உற்பத்தி செய்துள்ளது. 11மணி நேரம் 52 நிமிடங்கள் 08 நொடிகள் இந்த கார் தொடர்ந்து இயங்கியது. ஒரு முறை சார்ஜ் செய்தால் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் ஆயிரம் கிலோமீட்டரை இந்த கார் கடந்துள்ளது.1996ம் ஆண்டு சூரிய ஒளியில் இயங்கும் கார்களாக சன்ஸ்விஃப்ட் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 500 கிலோ எடை கொண்ட இந்த கார்,240 சுற்றுகள் இந்த கார் தொடர்ந்து இயங்கியது.ஒரு 100 கிலோமீட்டருக்கு 3.8கிலோவாட் மின் ஆற்றல் மட்டுமே தேவைப்படுகிறது. பிற கார்களை ஒப்பிடும்போது இந்த கார் 3-ல் ஒரு பங்கு மின்னாற்றலை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. சூரிய ஒளியில் இருந்து மின் உற்பத்தி செய்து அதன்மூலம் கார் இயங்கும் வகையில் இதனை பொறியாளர்களும் மாணவர்களும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.