செஞ்சது தப்புதான் NCLAT அதிரடி!!!
பீர் உற்பத்தி நிறுவனங்களான யூனைடட் பிரீவரியும், கார்ல்ஸ்பர்க் நிறுவனமும் இணைந்து இந்திய விதிகளை மீறி வணிகத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இந்திய போட்டி ஆணையம் அண்மையில் 873 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை எதிர்த்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை இந்த நிறுவனங்கள் நாடினர்.இரண்டு நடுவர்கள் அடங்கிய அமர்வில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. அதில் போட்டி ஆணைய விதிகளை மீறி இரு நிறுவனங்களும் அளவுக்கு அதிகமான விலையில் பீர்பாட்டில்களை விற்றதும், போட்டி ஆணைய விதிகளை மீறி,கிட்டத்தட்ட ஒரே விலையில் பீரை விற்றதும் உறுதியாகியுள்ளதாக NCLAT தெரிவித்துள்ளது. இந்திய போட்டி ஆணையம் சரியான முடிவைத்தான் அளித்துள்ளதாகவும், இதில் தாங்கள் என்ன தீர்ப்பு வழங்கமுடியும் என்று NCLAT நடுவர்கள் கைவிரித்துள்ளனர். இந்தியாவில் பல பீர் உற்பத்தி நிறுவனங்கள் இருந்தாலும் UBI மற்றும் கார்ல்ஸ்பர்க் நிறுவன பீர்கள் சுவை மிகுந்ததாகவும், அதிக வாடிக்கையாளர்கள் விரும்பி குடிப்பதும் குறிப்பிடத்தக்கது.