என் வழி, தனி வழி!!! ரஜினி ஸ்டைலில் கலக்கும் ITC!!!
உலக அரசியல் நிலைமை எப்படி மாறினாலும் பரவில்லை என்று சில பங்குகள் நிலையான ஏற்றம் பெறுவத வழக்கமாக கொண்டுள்ளன. இந்த வகையில் தான் இந்தியன் டொபாக்கோ கம்பெனி எனும் itc நிறுவன பங்குகள் மட்டும் 29% உயர்ந்துள்ளன. சிகரெட் புகைப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், மக்களின் தினசரி வாழ்வில் ஐடிசி நிறுவன பொருட்கள் அதிகம் விற்பதாலும் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது ஐடிசி நிறுவன பங்குகள் 3-வது காலாண்டில் மிகச்சிறப்பாக முதலீடுகளை திரும்பத் தந்துள்ளதால் அதில் பணம் போட்டவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஐடிசி நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஹோட்டல்களும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நல்ல வளர்ச்சியை அளித்துள்ளதால் ஐடிசி நிறுவன பங்குகள் நல்ல லாபத்தை அளித்துள்ளன. உணவுத்துறையில் ஐடிசி நிறுவனத்தின் பிஸ்கெட்டுகள் மக்கள் மத்தியில்நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளன. 2020ம் ஆண்டுக்கு பிறகு சிகரெட் மீதான வரி உயர்த்தப்படாமல் உள்ளதும் இந்த நிறுவனம் லாபத்தை பதிவிட முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.