எல்லாம் யானை விலை குதிரை விலை தான்!!!!
நோபுரோக்கர் என்ற நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் வீடுகள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் தற்போது வீடு வாங்கும் எண்ணத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும், ஏனெனில் வீடு வாங்க இது உகந்த சூழல் என்றும், வட்டி விகிதம் அதிகம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை,பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் இதே கருத்தைத்தான் வீடு வாங்குவோர் முன்வைக்கின்றனர். வீட்டின் விலை ஒரு பக்கம் அதிகம் என்றால் அதற்கு வாங்கும் கடனின் வட்டி விகிதம் மிகமிக அதிகமாக உள்ளதாகவே பலரும் புலம்பித்தள்ளியுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பில் ருசிகரமான மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் 43%பேர் 60 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வீடுகளையே வாங்க விரும்புவதும் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒருபக்கம் இருக்க 1 கோடி மற்றும் இரண்டரை கோடி ரூபாய்க்கு மேல் உள்ள வீடுகள் அதிகளவில் விற்றுத்தீர்ந்துள்ளதும் தெளிவாகிறது. கொரோனா பெருந்தொற்று நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை தெரியாமல் வாங்கிவிட்டோம் என புலம்பியவர்கள்தான் அதிகம் என்றும் அந்த புள்ளி விவரம் கூறுகிறது.