ஆடிய ஆட்டம் என்ன? செக் வைத்த செபி
விதிகளை மீறியதாகக் கூறி சகாரா குழுமத்தின் சொத்துகள் மற்றும் வங்கிக்கணக்குகளை இணைத்துக்கொள்ள பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி உத்தரவிட்டுள்ளது. OFCDS எனப்படும் திட்டத்தை செயல்படுத்தியபோது பங்குச்சந்தை விதிகளை சகாரா குழுமம் மீறியுள்ளதாக புகார் எழுந்தது. இதற்கான அபராதத் தொகையாக 6 கோடி 42 லட்சம் ரூபாய் வசூலிக்கத் திட்டமிடப்பட்டது. இந்த வழக்கில் சகாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய்,அசோக் ராய் சவுத்ரி ஆகியோரின் கணக்குகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் செபி கொண்டுவந்துள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பே சகாரா நிறுவனத்தின் மீது செபி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிவிட்ட நிலையில் அதனை இன்னும் கடுமையாக்க செபி முடிவெடுத்துள்ளது. கடன்களையும் நிதிகளையும் பெற்றுக்கொண்டு அதனை விதிகளை மீறி பயன்படுத்தி இருந்தால் அவர்களுக்கு யாரும் கடன் கூட தரக்கூடாது என்றும் செபி விதிகளை வகுத்துள்ளது. இதன்காரணமாக சகாரா குழுமத்தில் கடன் சுமை அதிகரித்து வருகிறது. 2008-09 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த சகாரா குழுமம் காலப்போக்கில் நலிவுற்று தற்போது பெரிய இழப்புகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.