சாம்ராஜ்ஜியம் ஒரு நாளில் வந்துவிடவில்லை!!!
1983-ம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவராக வெளியேறியதில் இருந்து இப்போது வரை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வாழ்க்கை ஒன்றும் சாதாரணமானது இல்லை.
65 வயதாகும் வியாபார ஜாம்பவானான முகேஷ் அம்பானி , எப்போதும் வாய்ப்புக்காக காத்திருப்பவர் அல்ல அதனை உருவாக்கி அதில் பயணிப்பவர் என்கிறது ரிலையன்ஸ் வட்டாரம் ரிலையன்ஸ் குழுமத்தை கட்டமைத்ததில் முகேஷ் அம்பானியின் பங்கு மிகப்பெரியது.கடந்த 20 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி பல தருணங்களில் முதலிடத்தை தொட்டுள்ளது என்றால் அது மிகையல்ல.. 2007ம் ஆண்டு முதன்முறையாக ரிலையன்ஸ் குழுமம்100பில்லியன் டாலர் சந்தை மதிப்பை கொண்டதாக உருவெடுத்தது.2016-ல் ஜியோவை அறிமுகப்படுத்தியதில் இருந்து, உலகின் மிகப்பெரிய சுத்தீகரிப்பு ஆலையை கட்டமைத்தது வரை முகேஷ் அம்பானி தொட்ட உயரங்கள் ஏராளம் முகேஷ் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் குழுமம் 20 ஆண்டுகள் பயணித்த பயணம் குறித்து சந்தையில் உள்ள பிற தொழிலதிபர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
வளர்ச்சி என்றால் என்ன என்பதை வரையறுத்தவர் முகேஷ் அம்பானி என ஹர்ஷ் கோயன்கா தெரிவித்துள்ளார். சிட்டி இந்தியா நிறுவனத்தின் தலைவராக உள்ள ஜெர்ரி ராவ், முகேஷ் அம்பானியை சரமாரியாக புகழ்ந்து தள்ளியுள்ளார். முகேஷ் அம்பானியின் திறமை குறித்து இந்தியாவின் பல தொழிலதிபர்களும் தங்கள் பிம்பத்தை தெரிவித்து வருகின்றனர்.ஒரு செயலை செய்து காட்டுவதில் திறமைபெற்றவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பதே பலரும் கூறும் சிறம்பம்சமாக உள்ளது.