ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது தான் என்னால் வளர முடிஞ்சது!!!
அண்மை காலங்களில் பிரபல தொழிலதிபர் அதானியை பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் விதமாக கவுதம் அதானி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்,அதில் தனது தொழில் வளர்ச்சிக்கு மோடியை காரணமாக கூறுவதா என்றும் ஆதங்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியும் தாமும் ஒரே மாநிலத்தவர் என்ற ஒரே காரணத்துக்காக தாம் மிகவும் எளிதாக இலக்காக மாற்றப்படுவதாகவும் கவுதம் அதானி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமராக ராஜிவ்காந்தி இருந்தபோது தான், தனது தொழில் வளர்ச்சி மிகப்பெரிய உயரத்தை எட்டியதாகவும் கவுதம் அதானி கூறியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் தலைவராலும் தாம் வளரவில்லை என்று கூறியுள்ள அதானி, அரசாங்கங்கள் அறிவிக்கும் திட்டங்களை சரியாக பயன்படுத்துவதால் தம்மால் வளர முடிந்ததாக கூறியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது தாம் ஒரு சாதாரண தொழில் முனைவராக இருந்ததாகவும், நரசிம்மராவ்-மன்மோகன்சிங் காலகட்டத்தில் தான் தம்மால் இரண்டாவது முறையாக பெரிதாக வளர முடிந்ததாகவும் அதானி கருத்து தெரிவித்துள்ளார்