என்டிடிவிக்கு இத்தனை கோடி கிடைக்குமா?
NDTV செய்தி நிறுவனம் என்பது கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை விரிவாக்க நினைத்த அதன் உரிமையாளர்கள் பிரணாய் மற்றும் ராதிகா ராய் அதிக கடன்களை வாங்கிக் குவித்தனர். இதனால் நிலைமை கையை மீறி சென்றதும் NDTV பங்குகளை 27.26% விற்க முடிவு செய்தனர். இதனை அண்மையில் பிரபல தொழிலதிபர் அதானி வாங்கியுள்ளார்.இயக்குநர் பதவியில் இருந்து பிரணாயும், ராதிகாவும் விலகியுள்ள நிலையில் அமன் குமார் சிங் இந்த நிறுவன இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5% பங்குகளை இன்னமும் ராய் வைத்திருக்கின்றனர். தற்போது அதானியிடம் விற்றதன் மூலம் ராய் தம்பதிக்கு 602 கோடி ரூபாய் நிதி கிடைக்க இருக்கிறது.