2025-ல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்!!!!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய ஜெய்சங்கர், உலகளவில் இந்தியா 2025-ம் ஆண்டில் உற்பத்தி கேந்திரமாக இருக்கும் என்றார். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா 2025-ம் ஆண்டில் எட்டும் என்றும் தெரிவித்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்பில் இந்தியாவும் சைப்ரசும் சிறந்த பங்காளர்கள் என்று தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் முதலீடு செய்ததில் சைப்ரஸ் 10வது பெரிய நாடு என்று தெரிவித்துள்ளார். மொத்தம் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை சைப்ரஸ் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாகவும் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் மருந்துகள்,இரும்பு, ஸ்டீல்,பீங்கான் பொருட்கள் மற்றும் மின்சாதன இயந்திரங்களை சைப்ரஸ் நாட்டுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது. இந்தியாவுக்கும்-சைப்ரஸ் நாட்டுக்கும் இடையேயான உறவின் 60வது ஆண்டை கொண்டாடும் வகையில் சைப்ரஸுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.