வீடு வேணுமா வீடு!!!! ஏலம் போடும் வங்கிகள்!!!
பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி,பொதுத்துறை வங்கிகளில் (குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில்) 11 ஆயிரத்து 653 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். பணத்தை திரும்ப செலுத்தாத நீரவ் மோடியின் சொத்துகளை ஏலத்தில் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சூழலில் கடனை வசூலிக்கும் தீர்ப்பாயத்தின் மும்பை கிளையின் உத்தரவை ஏற்று வங்கி அதிகாரிகள் சொத்துகளை ஏலமிட ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர். புனேவில் உள்ள யூ பூனே ஹவுசிங் நிறுவத்தில் உள்ள 16வது மாடியில் எதிரெதிரே உள்ள வீடுகளை ஏலத்தில் விட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு பிளாட்டின் விலை ரூ.8.99 கோடி,மற்றொன்றின் விலை ரூ.8.93 கோடி, இந்த வீடுகளை விற்க வரும் பிப்ரவரி 3ம் தேதி ஏலம் நடைபெற இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் புகாரை அடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 15க்கும் மேற்பட்ட வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களில் இந்த சொத்து ஏலமெடுத்தால் மற்ற வங்கிகளும் போட்டிக்கு வர அதிக வாய்ப்புள்ளது. நீரவ் மோடி மற்றும் மெகுல் கோக்சி ஆகியோரை நாடு கடத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளன. கடன்களை பெற்றுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படும் நீரவ் மோடி மற்றும் அவரின் உறவினர் மெகுல் கோக்சி ஆகியோர் ஆண்டிகுவா மற்றும் பார்படாஸ் தீவிகளில் வசிப்பதாக கூறப்படுகிறது.
கடன்களை எப்போது கட்டுவீர்கள் என்று வங்கிகள் நச்சரிக்கும் சூழலில் அவர்கள் அந்நாட்டில் சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நீரவ் மோடி மற்றும் மெகுல் கோக்சி ஆகியோர் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய அமைப்புகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடித்தக்கது.