ஐயா மோடியின் திட்டம் இம்புட்டு பெருசாம்..
மின்னணு சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பாரத பிரதமரின் திட்டங்கள் குறித்து அவர் பட்டியலிட்டார். அதில் பிரதமர் மோடியின் இலக்குப்படி 2023-ம் ஆண்டில் இந்த ஓராண்டில் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு செல்ஃபோன் ஏற்றுமதி இந்தியாவில் இருந்து நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உலகளவில் செல்போன்கள் ஏற்றுமதியில் இந்தியா முதல் 10 இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதே மோடியின் திட்டங்களில் ஒன்றாக உள்ளதாக கூறியுள்ளார். மொபைல் போன் ஏற்றுமதிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்து வருவதாகவும், இந்த துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய காத்திருப்பதாகவும் ராஜிவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து தற்போது ஆப்பிள் மற்றும் சாம்சங் ரக போன்கள் உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு 45ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது செல்போன்களை மட்டும் குறிவைக்காமல், செல்போன் சார்ந்த உபகரணங்கள், டிஜிட்டல் ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட சாதனங்கள் குறித்த உற்பத்தியிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக ராஜிவ் தெரிவித்துள்ளார். போட், பயர் போல்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் உலகளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டேட்டா சென்ட்டர் உள்ளிட்ட துறைகள் குறித்தும் ஆராய வேண்டியுள்ளதாகவும், அது சார்ந்த பொருட்கள் தயாரிப்புக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிக்கவும் ஏற்பாடுகள் நடப்பதாகவும் மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.