புத்தாண்டு பரிசு !!! என்ன தெரியுமா?
இந்தியாவில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை கடந்த 1-ம்தேதி 25 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. இந்த சூழலில் சென்னையில் 25 ரூபாய் 50 காசுகள் உயர்ந்த வர்த்தக சிலிண்டர் ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி ஆயிரத்து 917 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தசூழலில் ஆண்டின் முதல் நாளிலேயே வர்த்தக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்தியாவில் புத்தாண்டு பரிசு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது வெறும் துவக்கம்தான் என்று எச்சரித்துள்ள காங்கிரஸ்,வர்த்தக சிலிண்டரின் விலையேற்றத்தால் மக்கள் உணவகங்களில் சென்று சாப்பிடும்போது அந்த விலையும் உயரும் அபாயம் உள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 153ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.