மிச்சத்தையும் நாங்களே வாங்கிக்கிறோம்…
30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி நிறுவனங்களை நடத்தி வரும் புதுடெல்லி தொலைக்காட்சி எனப்படும் NDTV அண்மையில் அதன் பங்குகளை பிரபல தொழிலதிபரான அதானி குழுமத்துக்கு விற்றுள்ளனர். இந்த சூழலில் என்டிடிவி கடன் சிக்கல்களில் இருந்தபோது,அதன் பங்குகளை திறந்தவெளியில் பங்குச்சந்தையில் விற்றனர். அப்போது பங்குகளை வாங்கிய சிலருக்கும் சேர்த்து அந்த பங்குகளையும் அதானி குழுமமே வாங்கிக்கொள்வதாக அறிவித்துள்ளது. அதன்படி NDTV பங்குகளை வைத்திருந்தோருக்கு ஒரு பங்குக்கு கூடுதலாக 48 ரூபாய் 65 பைசா வழங்கப்படுகிறது.இதனால் என்டிடிவியின் பங்குகளின் விலை 342 ரூபாய் 65 காசுகளாக உள்ளது. கடன் சுமையில் சிக்கித்தவித்த என்டிடிவியை அதானி குழுமம் வாங்கிய நிலையில் அதன் பணியாளர்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.