ஃபிரிட்ஜ் விலை உயர போகுது…எவ்வளவு தெரியுமா!!!
ஒரு காலத்தில் ஆடம்பரமாக கருதப்பட்ட ஃபிரிட்ஜ் தற்போது எல்லா வீடுகளிலும் பரவலாக பார்க்க முடிகிறது. இந்நிலையில் ஃபிரிட்ஜ் விலை 5விழுக்காடு வரை உயர்த்தப்பட அதிக வாய்ப்புள்ளது.ஜனவரி 1-ம் தேதி முதல் BEE தர சான்று விதிகள் அமலானதில் இருந்து இந்த விலை உயர்ந்துள்ளது. கோத்ரேஜ்,ஹயர், பேனசானிக்,உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விலையேற்றத்தை உடனடியாக அமல்படுத்துகின்றன நல்ல தரமான ஃபிரிட்ஜா என்று நட்சத்திர ரேட்டிங்கை வைத்தே ஃபிரிட்ஜ் வாங்கப்படுகின்றன. ஏற்கனவே உள்ள பி.இ.இ தரசான்றுக்கு மாற்றாக புதிய விதிகளும் அமலாகியுள்ளதால் எதை பின்பற்றுவது என்று நிறுவனங்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. அறிமுக நிலையில் ஃபிரிட்ஜ்களின் விலை 5 விழுக்காடு வரை உயர்வதை நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இந்திய ஃபிரிட்ஜ்களின் சந்தை 2022 நிலவரப்படி 3 புள்ளி 07 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டது.2028ம் ஆண்டுக்குள் இந்த தந்தை 5.88 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று தெரிவிக்கிறது.