ஓ… அவரே சொல்லிட்டாரா!!! அப்போ சரி!!!
உள்நாட்டில் உள்ள சந்தைகளில் மிகவும் சிறந்த வங்கிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ள பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்திலும், அடுத்த இடங்களில் ஐசிஐசிஐ வங்கி உள்ளது. இதற்கும் அடுத்த இடத்தில் எச்டிஎப்சி வங்கி இருக்கிறது. 2008ம் ஆண்டு உலகமே கடும் பொருளாதார சிக்கலை சந்தித்தபோதும் வலுவாக நின்ற ஒரே பெரிய வங்கி என்ற பெருமையை பாரத ஸ்டேட் வங்கி திகழ்ந்தது. D-SIB என்று வகைபடுத்தப்பட்ட இந்த 3 வங்கிகள் அதன் முன்னேற்றத்தை தொடர வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி 0.60% என்ற அளவை வங்கிகள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி பெரிய வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது. D-sib வகை வங்கிகள் எவை என்ற பட்டியல் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி தரவுகளின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.