இந்தியாவில் சரமாரியாக விற்றுத்தள்ளப்பட்ட சொகுசு கார்
உலகளவில் மதிப்புமிக்க கார்நிறுவனங்களில் பிஎம்டபிள்யு நிறுவனத்துக்கு என தனி இடம் உள்ளது.2022-ம் ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம் 19 ஆயிரத்து 263 கார்கள் மற்றும் பைக்குகளை விற்றுள்ளது. கடந்தாண்டில் மட்டும் 11 ஆயிரத்து981கார்களை BMW கார்கள் மற்றும் மினி ரக கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் இத்தனை கார்கள் விற்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும். ஸ்போர்ட்ஸ் வகை கார்களான x1,x3,x5,x7ஆகிய கார்களின் விற்பனை 60விழுக்காடு உயர்ந்துள்ளது. 3,5 மற்றும் 6 பேர் அமர்ந்து பயணிக்கும் பிஎம்டபிள்யு நிறுவன கார்கள் வேகமாக விற்பனையாகிறது. 6 மாதங்கள் காத்திருந்து கார்கள் டெலிவரி செய்யும் அளவுக்கு அந்த கார் மீதான மோகம் மக்கள் மத்தியில் உள்ளதாகவும் BMW தெரிவிக்கிறது. பைக்குகளை பொறுத்தவரை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7 ஆயிரத்து 282 பைக்குகளை விற்றுள்ளது, இது 40% வளர்ச்சி என்று அந்த நிறுவனத்தின் இந்திய தலைவர் விக்ரம் பவா தெரிவித்துள்ளார்.