பணமதிப்பிழப்பு பற்றி கருத்து தெரிவித்த அம்மையார்!!!
2016ம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அண்மையில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு சரிதான் என்றும், நீதிபதி நாகரத்ணா மட்டும் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்தனர். இந்த சூழலில் தீர்ப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்பு கருத்துகளை தெரிவித்துள்ளார். 4 நீதிபதிகள் மத்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டி டிவிட்டரில் கருத்துகளை தெரிவித்துள்ளார். தேசத்தின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கருப்பு பணத்தை கட்டுப்படுத்த, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டத்தாக நீதிபதிகள் கூறியதை மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ரிசர்வ் வங்கியின் குழு ஒப்புதலுக்கு பிறகுதான் மத்திய அரசு பணமதிப்பிழப்பை அறிவித்ததாக கூறியுள்ள நிர்மலா சீதாராமன், உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை சுட்டிக்காட்டியுள்ளார்.