பணவீக்கம் ,விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது தான் தேவை:சக்தி காந்ததாஸ்
சர்வதேச நாணய நிதியத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் பங்கேற்றார். பின்னர் பேசிய சக்தி காந்ததாஸ் இந்தியா போன்ற நாடுகள் வெளிநாட்டு கச்சா எண்ணெயை பயன்படுத்துவதால் இந்திய பொருளாதாரமும் அதனை ஒட்டியே இருக்கிறது என்றார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது,விலைவாசியும் கணிசமாக உயர்வதாகவும் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதே முதல் முன்னுரிமை என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் ,தெற்காசியாவில் பசுமை ஆற்றல் மற்றும் ஆற்றல் ஒத்துழைப்பு மிக அவசியமாக உள்ளது என்றார்.இந்தியாவில் பணவீக்கம் கடந்தாண்டில் நவம்பருக்கு முன்பு வரை தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் தாங்கும் அளவை விட அதிகமாகவே இருந்தது. அது கடந்த நவம்பர் மாதத்தில்தான் 5.88% ஆக குறைந்தது. விலைவாசி உயர்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகத் தான் ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டிவிகிதங்களை கடுமையாக உயர்த்தியுள்ளது.