இந்த கம்பெனிலயா வேலை பார்க்குறீங்க!!!
உலகளவில் நிலவும் நிலையற்ற பொருளாதார சூழலில் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் அமெரிக்க பெருநிறுவனங்கள், தங்கள் பணியாளர்களின் அளவை குறைத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அமேசான் நிறுவனத்தில் புதிதாக 18 ஆயிரம் பேரை வேலையில் இருந்து தூக்குவதாக அண்மையில் அந்நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த பட்டியலில் இந்தியாவில் ஆயிரம் ஊழியர்களுக்கு வேலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரானா, சிறுகுறுநிறுவனங்க்கள் சார்ந்த சேவைகளில் பணியாற்றிய துவக்க நிலை ஊழியர்கள் ஆயிரம் பேருக்கு இந்த வேலைஇழப்புக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1 லட்சம் பேர் அமேசானில் வேலை செய்து வரும் நிலையில் அதில் 1விழுக்காடு பணியாளர்களை இந்த நிறுவனம் இழக்க இருக்கிறது. உலகம் முழுவதும் அந்த நிறுவனத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 16 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். 2020ம் ஆண்டு உணவு டெலிவரி வியாபாரத்தை பெங்களூருவில் துவங்கிய அமேசான் நிறுவனம் கடந்தாண்டு அதனை இழுத்து மூடியது. உணவு டெலிவரி மட்டுமின்றி கல்வி சேவை தொடர்பான பிரிவையும் கடந்தாண்டே அமேசான் மூடிவிட்டது. இந்தியாவில் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்தும் அந்த நிறுவனத்தால் வெற்றிபெற முடியாத சூழலே நிலவி வருகிறது.