மிட்டாய் வேண்டுமா? இதோ வந்துட்டோம்!!!!
லோட்டஸ் சாக்லேட் என்ற நிறுவனத்தின் 26 விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கு ரிலையன்ஸ் குழுமத்தின் இரண்டு உட்பிரிவு நிறுவனங்கள் திறந்தநிலை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ரிலையன்ஸ் கன்சியூமர் புராடெக்ட் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் ரீட்டெயில் ஆகிய நிறுவனங்கள் லோட்டஸ் நிறுவனத்தின் 33புள்ளி 38 லட்சம் பங்குகளை ஒரு பங்கு 115 ரூபாய் 50 காசுகள் என்ற அளவுக்கு வாங்க திட்டமிட்டுள்ளனர். இந்த கைப்பற்றும் முயற்சி வரும் பிப்ரவரி 21ம் தேதி தொடங்கி மார்ச் 6ம் தேதிக்குள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 38 புள்ளி 56 கோடி ரூபாய்க்கு இந்த பரிவர்த்தனைகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் , குறிப்பிட்ட சாக்லேட் நிறுவனத்தை வாங்க இசைவு தெரிவித்துள்ள சூழலில் லோட்டஸ் சாக்லேட் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூ.149.35 ஆக ஏற்றம் பெற்றுள்ளது.