பட்ஜெட்டில் வருகிறது இந்த அம்சம்!!! உண்மையில் வருமா?
இந்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வருமான வரி தொடர்பாக எந்தெந்த அம்சங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் குறைந்த வருவாய் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் optional income tax வரம்பை கொண்டுவர பணிகள் நடப்பதாக தெரிவித்தார். பழைய வருமான வரி தாக்கல் திட்டத்தை போலவே எந்த சலுகைகளும் தேவையில்லை என்று குறிப்பிடும் வகையில் வருமான வரி தாக்கல் செய்யும் முறையும் வர இருப்பதாக தெரிவித்துள்ளார். 7 வகைகளாக உட்பிரிவு இருக்கும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.குறைவான வருவாய் உள்ளவர்கள் பயனடையும் வகையில் 7 உட்பிரிவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார். கடந்த 2020-21ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பட்ஜெட்டின்படி வீட்டுக்கடன் மற்றும் வீடு கட்டுவது தொடர்பான முதலீடுகள் 80சி பிரிவில் சலுகையாக பெற முடிகிறது. இதனை மேலும் எளிமையாக்கும் வகையில் புதிய அறிவிப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இரண்டரை முதல் 5 லட்சம் ரூபாய் வருவாய் உள்ளவர்களுக்கு 5 விழுக்காடு வருமான வரி இருக்கும் என்றும், 5-10 லட்சம் உள்ளவர்களுக்கு 10% வருமானவரியும், ஏழரை முதல் 10லட்சம் ரூபாய் உள்ளவர்களுக்கு 15% வருமான வரியும், 10-12.5 லட்சம் சம்பாதிப்பவர்களுக்கு 20% வரியும்,12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு 25% வருமான வரியும், அதற்கு அதிகம் சம்பாதிப்போருக்கு 30% வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது.