இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றம்!!!
கடந்த வாரம் தொடர்ந்து விழுந்த இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் முதல் வார்த்தக நாளில் ஏற்றம் கண்டன. அமெரிக்க பங்குச்சந்தை மட்டுமின்றி, சீனா, தென்கொரியா பங்குச்சந்தைகளும் ஏற்றம் கண்டன. வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச் சந்தையில் சாதகமான சூழல் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் 850 புள்ளிகள் அதிகரித்து 60 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் 240 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 101 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. தகவல் தொழில்நுட்பம், உலோகம் ,ஆட்டோ உள்ளிட்ட துறை பங்குகள் உயர்வை சந்தித்தன. மகேந்திரா அண்ட் மகேந்திரா உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் 3% ஏற்றம் பெற்றன. ஆசியா, ஜப்பானிய பங்குச்சந்தைகள் ஏற்றம் பெற்றது.