குறைந்த விலையில் மகேந்திரா தார் அறிமுகம்!!!
மகேந்திரா நிறுவனம் 2wd என்ற புதிய வாகனத்தை இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விலையாக 9 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக அளவிலான இந்த வாகனம் 3 வகைகளில் 2 நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. அறிமுக சலுகையாக முதல் 10ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் புக் செய்யும் 10 ஆயிரம் பேருக்கு வரும் 14ம் தேதியே வண்டி டெலிவரி கிடைக்கும் வகையில் விநியோக பிரிவு செயல்படுத்தப்பட்டுள்ளது. ப்ராண்ஸ் மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த வாகனங்கள் கிடைக்கும் என்றும், ஏற்கனவே கிடைத்த , சிவப்பு,கருப்பு மற்றும் நீலம் ஆகிய 3 நிறங்களிலும் புதிய வாகனங்கள் கிடைக்கும் என்றும் மகேந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. டீசலில் இயங்கும் வாகனம் ஒன்றரை லிட்டர் மோட்டர், 117 பி எச்பி மற்றும் 300 NM டார்க் வசதியை கொண்டுள்ளது. தார் 4wd வாகனங்களில் உள்ளதைப்போலவே அதே பாணியில் 2WDயிலும் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகமாகும் வாகனத்தில் ஸ்டைல் பேக், ஆர்ம் ரெஸ்ட் உள்ளிட்ட சில புதிய சாதனங்களும் வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Thar 2WD AX (O) Diesel MT hard-top: 9.99 லட்சம் ரூபாய்க்கும்
Thar 2WD LX Diesel MT hard-top: 10.99 ரூபாய்க்கும்
Thar 2WD LX Petrol AT hard-top: 13.49 lakh ரூபாய்க்கும் விற்கப்படும் என்று மகேந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது