ஐபோன் உற்பத்தியை நோக்கி பயணிக்கும் டாடா நிறுவனம்!!!
இந்தியாவில் இதுவரை நேரடியாக எந்த நிறுவனமும் ஐபோனை உற்பத்தி செய்யவில்லை. தைவான், சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மட்டுமே தங்கள் இந்திய கிளைகளில் உற்பத்தியைச் செய்து வருகின்றன இந்த சூழலில் இந்தியாவிலேயே பெரிய ஐபோன் ஆலையை கட்டமைக்கும் பணியில் டாடா குழுமம் ஈடுபட்டு வருகிறது. தைவானைச் சேர்ந்து விஸ்ட்ரான் நிறுவனத்தை வாங்கும் பணியில் டாடா பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்குள் இந்த கூட்டு நிறுவனம் தயாராகிவிடும் என்று வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன மார்ச் மாதத்துக்குள் பேச்சுவார்ததையை முடித்தால் மட்டுமே அரசு அறிவித்த சலுகைகளை அடுத்த நிதியாண்டில் பெற முடியும் என்பதால் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. புதிய நிறுவனத்தின் திட்டப்படி, டாடா நிறுவனம் பெரும்பாலான பங்குகளையும், விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆலோசனைகளை டாடா பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஆலை பெங்களூருவில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலை அமைய இருக்கிறது. 20 லட்சம் சதுர அடியில் ஓசூரில் இந்த ஆலை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த ஆலையின் மூலம் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கஇருக்கிறது. சிப் தயாரிப்பிலும் கால் பதிக்க உள்ள டாடா குழுமம் உப்பு முதல் சிப் வரை அனைத்து துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது என்றால் அது மிகையல்ல.