குறைந்த அளவில் ஆட்களை பணிக்கு எடுத்த பெரிய நிறுவனம்
உலகளவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ்.இந்த நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தில் வெறும் ஆயிரத்து627 பேரை மட்டுமே புதிதாக வேலைக்கு சேர்த்தனர். வழக்கமாக இந்த காலகட்டத்தில் 10 ஆயிரம் பேர் வரை பணிகளில் சேறும் நிலையில், இந்த அளவு என்பது 84% குறைவாகும். இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறியோரின் அளவு ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் 27.10% ஆக இருந்தது. இது தற்போது 24.3%ஆக சரிந்துள்ளது கடந்த 9 காலாண்டுகளாக இல்லாத அளவாக கடந்த காலாண்டில் பணியாளர்கள் வெளியேற்றம் மற்றும் வருகை அமைந்திருந்தாக அந்த நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் புதிதாக 50 ஆயிரம் பேரை நிறுவனத்தில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிலான்ஜன் ராய் தெரிவித்துள்ளார் ஆட்களை புதிதாக பணியில் சேர்க்கவில்லை என்றாலும், ஏற்கனவே உள்ள பணியாளர்கள் வெளியேறும் விகிதமும் இன்போசிஸ்ஸில் குறைந்துள்ளது இதே பாணியில்தான் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்ஸிலும் பணியாளர்கள் வெளியேற்றம் குறைந்துள்ளது கணிப்புகளை மீறி இன்போசிஸ் நிறுவனம் டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 6 ஆயிரத்து586 கோடிரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி 2.4% உயர்ந்துள்ளது.இதே காலகட்டத்தில் டிசிஎஸ் நிறுவனம் 2.2% ஆக மட்டுமே இருந்தது.