அரைமணி நேரம் டைம்.. அதிர வைத்த பணி நீக்க நடவடிக்கை!!!
கோல்ட்மேன சாச்ஸ் என்ற உலகப்புகழ் பெற்ற வங்கி அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கி கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சியை சந்திக்கிறது. இதையடுத்து ஆட்குறைப்பு திட்டம் செயல்படுத்தக் கோரி மேலிடம் கூறியது. இந்நிலையில் மீட்டிங் இருக்கிறது. உடனே வரவேண்டி உள்ளதாக ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்து நிறுவனம் வரவழைத்தது. தொலைபேசி அழைப்பு வந்த ஊழியர்கள் ஆஜர் ஆனதும். 30நிமிடங்கள் தான் உங்களுக்கு அவகாசம் இனி உங்களுக்கு வேலை இல்லை என்று அறிவித்து நோட்டீஸ் அளித்துள்ளனர். இதனால திக்குமுக்காடி போன ஊழியர்கள் அதிரசசியில் உறைந்தனர். குறிப்பிட்ட வங்கியில் சுமார் 49ஆயிரம் பேர் வேலை செய்தனர். அதிரடி ஆட்குறைப்பு காரணமாக 6%பேர் வீட்டு சென்றுள்ளனர். . உலகளவில் வளர்ச்சி திட்ட நிதி அளிக்கும் நிறுவனம், சொந்த நிறுவன ஊழியர்களை நீக்கியுள்ளது விமர்சிக்கப் பட்டு வருகிறது