டெல்லியில் நடந்த “ருசிகர” வழக்கு..ஜட்ஜ் சொன்ன பலே தீர்ப்பு…

அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பிரபலமாக திகழ்பவை சப்வே நிறுவனத்தின் பர்கர் மற்றும் சான்ட்விச்கள்.. இந்த நிலையில் டெல்லியில் சப்வே நிறுவனத்தில் கிடைப்பதைப்போலவே அதே பாணியில் மூலப்பொருட்களை கொண்டு உணவுப்பொருட்களை suberb என்று நிறுவனம் விற்று வந்தது. உடனே விருட்டென கிளம்பிய சப்வே நிறுவனம், தனது லோகோ, தனது உணவுப்பொருட்களை குறிப்பிட்ட தனியார் நிறுவனம் காப்பி அடித்து தனது வியாபாரத்துக்கு இழப்பு ஏற்படுத்தி வருவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழங்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது சப்வே நிறுவனம் சரமாரியான குற்றச்சாட்டுகளை எதிர் நிறுவனத்தின் மீது முன்வைத்தது . அதாவது என் நிறுவன லோகோவை காப்பி அடித்துள்ள எதிர் நிறுவனம், நாங்கள் தரும் அதே பாணியில் அதே ருசியில் உணவுகளை தருகிறார்கள் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று கூறியது. இதனை கேட்டநீதிபதி எதிர்தரப்பு வாதங்களையும் கேட்டார். அப்போது பேசிய சப்பர்ப் நிறுவனத்தினர். லோகோவும், கலரும்தான் பிரச்னை என்றால் அதை நாங்கள் மாற்றிக்கொள்கிறோம் என்றனர். எனினும் யோசிக்க நேரம் அளித்த நீதிபதி ஹரி சங்கர், வழக்கை இந்த மாதம் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார். இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதில் சப் என்றால் எல்லாம் சப்வே நிறுவனத்தை குறிக்காது என்றும் வெளிநாட்டில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இந்தியாவில் சப் என்ற பெயரை நீங்கள் மட்டும் பயன்படுத்த முடியாது என்றும், இதற்கான முறையான சட்டமே இந்தியாவில் கிடையாது என்றும் சாட்டையை வீசினர். இந்த சூழலில் ஆட்சேபிக்கும் வகையில் இருந்த நிறுவனத்துக்கு எந்த அபராதமும் விதிக்காத உயர்நீதிமன்ற நீதிபதி, சப்வே வேறு , சப்பர்ப் வேறு என்று கூறி வழக்கை முடித்துவைத்தார்.