முறைகேடாக பணம் கையாடலா??
நிப்பான் இந்தியா மியுச்சுவல் பண்ட் மற்றும் எஸ் வங்கி ஆகியவற்றில் முதலீட்டாளர்கள் பணம் முறைகேடாக பயன்படுத்தப் பட்டுள்ளதா என பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி விசாரணையை தொடங்கியுள்ளது.
நிப்பான் இந்தியா மியுச்ச்சுவல் பண்டு என்ற பரஸ்பர நிதி இந்தியாவின் 4வது பெரிய பரஸ்பர நிதி ஆக உள்ளது.
துவக்கத்தில் இந்த பரஸ்பர நிதியை வைத்திருந்து பின் அதனை நிப்பான் நிறுவனத்துக்கு விற்றது அனில் அம்பானி.
குறிப்பிட்ட இந்த நிதி 2016-2019வரை தவறுதலாக பயன்பாடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து செபி விசாரிக்க்க தொடங்கியுள்ளது.
முதலீட்டார்களுக்கு தெரியாமல் அந்த தொகையை தாய் நிறுவனம் எடுக்க கூடாது என்ற விதி மீறப்பட்டு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
குறிப்பிட்ட இந்த பரஸ்பர நிதி யில் எஸ் வங்கியின் பாண்டுகள் அதிகம் சேர்க்கப்பட்டு பின்னர் 2020இல் அவை தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டன. இந்த சூழலில் அனில் அம்பானி, நிப்பான் , எஸ் பேங் ஆகிய மூவரின் பரிவர்த்தனை மற்றும் நிதி கையாடல் குறித்து செபி விசாரிக்க துவங்கியுள்ளது. இதில் எவரேனும் விதி மீறப்பட்டு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க செபி திட்டமிட்டு உள்ளதும் . இது தொடர்பாக விதிகளை கடுமையாகவும் மாற்ற செபி திட்டமிட்டு உள்ளது