நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் ஷேர் பண்றீங்களா..அதுக்கும் தனியா பணம் கட்டணும்!!!
உலகளவில் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்றாக திகழ்கிறது நெட்ஃபிளிக்ஸ். இந்த ஓடிடி தளம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சூழலில், அதன் பாஸ்வேர்டுகளை பகிர்வதால் சிக்கல் ஏற்படுகிறது என்றும் நிதி இழப்பு ஏற்படுவதாகவும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் வரும் காலாண்டில் இருந்து பாஸ்வேர்டுகளை பகிர்ந்தால் அதற்கும் தனியாக பணம் கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்த Reed hastings என்பவர் பதவி விலக உள்ளார். அவருக்கு பதிலாக புதிய நிர்வாகம் பதவியேற்றால் அவர்கள் கொண்டு வரும் புதிய சட்டங்கள் வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாடுகளில் தற்போது வரை பாஸ்வேர்டுகளை பகிரும் நபர்களுக்கு இந்திய ரூபாயில் 250 ரூபாய் சந்தாவாக வசூலிக்கப்படும் நிலையில் இந்தியாவில் இதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை. செல்போன்கள் மற்றும் கணினிகளின் IP முகவரி, டிவைஸ் ஐடி ஆகியவற்றின் அடிப்படையில் புதிய கட்டண முறை அமலாக இருக்கிறது.