வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள ஒப்புதல் பற்றி தெரியுமா?
வங்கி லாக்கர்களில் நகை,பணம் வைத்திருக்கும் நபர்கள் தங்கள் வங்கிகளில் ஒப்பந்தங்களை புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் இந்த ஒப்பந்த புதுப்பிப்புக்கு ரிசர்வ் வங்கி திங்கட்கிழமை அனுமதி அளித்துள்ளது. இதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ம் தேதி என்றும் , வங்கிகள் ஜூன் 30க்குள் பாதி ஒப்பந்தங்களையாவது புதுப்பிக்க வேண்டும் என்றும்,செப்டம்பர் 30ம் தேதிக்குள் 75% மற்றும் டிசம்பர் 31ம் தேதிக்குள் முழுவதையும் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பல வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய ஒப்பந்தம் புதுப்பித்தல் குறித்து தெரியாமல் உள்ளதால் இதனை நீட்டிக்க வேண்டும் என்று வங்கிககள் தரப்பில் கோரப்பட்டது. வங்கி லாக்கர் அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தி, அதில் உள்ள காட்சிகளை 180 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. திருட்டுகளை தடுக்க ஒவ்வொரு முறை லாக்கரை திறக்கும் போதும் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் செல்ல வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியானது வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது.