ஏற்றப்பாதையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம்!!!
ஒவ்வொரு காலாண்டும் இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தங்கள் வரவு செலவு கணக்குகள், காலாண்டில் அந்தநிறுவனம் செய்துள்ள சாதனைகளை பட்டியலிடுவது வழக்கம்.இந்த வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். கடந்த டிசம்பர் வரையிலான காலாண்டின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் மதிப்பு 15% உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது கடந்தாண்டில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் 1 லட்சத்து 91 ஆயிரத்து271 கோடி ரூபாயாக இருந்தது. இது தற்போது 2 லட்சத்து 20 ஆயிரத்து 592 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டை பொருத்தவரை நிகர லாபம் 17 ஆயிரத்து806 கோடியாக இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு டிசம்பர் காலாண்டில் வருவதை விட குறைவு என்றும், கடந்தாண்டு டிசம்பர் காலாண்டில் லாபம் 20 ஆயிரத்து 539 கோடியாக இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வட்டிகளை வங்கிகள் கடன் மீது திணிப்பதால் இந்த முறை டிசம்பர் காலாண்டில் லாபம் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. சில்லறை பிரிவு விற்பனை பொருட்கள் சீரான வளர்ச்சியை கண்டு வருவதாகவும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் விலை மாற்றம் இன்றி தொடர்ந்து சேவை வழங்கி வருவதால் இந்நிறுவன வளர்ச்சி இருக்கும் என்றும் அந்த முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். 2 ஆயிரத்து 800 ரூபாய் டார்கெட் விலை வந்தால் வாங்கலாம் என்று மோத்திலால் ஆஸ்வால் நிறுவனமும் கூறுகிறது.