நான் சொல்வதெல்லாம் உண்மை!!! உண்மையை தவிர வேறொன்றும் இல்லை….

இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைய காரணமாக கடந்த இரண்டு,3 நாட்களாக கூறப்படும் பெயர் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம் அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்த சூழலில் ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை திட்டமிட்டு இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கவுதம் அதானி கூறியுள்ளார். 413 பக்கங்கள் கொண்ட விளக்கம் அளித்துள்ள கவுதம் அதானி,நிதி ஆதாயத்துக்காக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஒரு நிறுவனத்தை மட்டும் குறிவைக்காமல், ஒட்டுமொத்த இந்தியாவையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கவுதம் அதானி குற்றம்சாட்டியுள்ளார். ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 24ம் தேதி வெளியிட்ட அறிக்கை முற்றிலும் பொய் என்று கூறியுள்ள அதானி குழுமம், அடிப்படை ஆதாரம் அற்ற,தவறான தகவல்கள் நிறைந்த அறிக்கையை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக அதானி குழுமம் எதிர்வினையாற்றியுள்ளது. முழுமையாக ஆராயாமலும்,முழுக்க முழுக்க சுயலாபத்துக்காவும் ஹிண்டன்பர்க் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதானி குழுமம் சரமாரியாக பதில் அளித்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் மொத்தம் கேட்கப்பட்டுள்ள 88 கேள்விகளில்,65 கேள்விகள் அதானி என்டர்பிரைசர்ஸ் சார்ந்தவையாக உள்ளதாகவும்,மீதமுள்ள 23-ல் 18 கேள்விகள் பங்குதாரர்கள் சார்ந்தவை என்றும்,5 கேள்விகளில் அடிப்படை ஆதாரமே இல்லாத குற்றச்சாட்டுகளும் உள்ளதாக தனித்தனியாக அதானி குழுமம் பதில் தந்துள்ளது. எந்த சட்டவிதிகளையும் மீறவில்லை என்று கூறியுள்ள அதானி குழுமம், ஹிண்டன்பர்க் முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் தர கடமைப்பட்டுள்ளதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.