அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகபோரின் அடுத்தகட்டம்!!
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக வர்த்தக பனிப்போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தற்போது அமெரிக்காவில் நிலை சரியில்லாததால் சீன தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு செல்லும் மூலதனங்கள் மற்றும் முதலீடுகளை பைடன் அரசாங்கம் தடுத்து நிறுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த அமெரிக்க அரசாங்கங்கள் முதலீடுகள் நிறுத்துவது குறித்து பரிசீலித்த நிலையில் பைடன் அரசாங்கம் அதில் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு,குவாண்டம்,சைபர்,5ஜி உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் அதிக கட்டுப்பாடுகளை அரசாங்கம் செய்ய இருப்பதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பைடன் தலைமையிலான அரசாங்கம், அரை கடத்திகள் எனப்படும் செமி கண்டக்டர்கள் துறையில் தொழில்நுட்பங்களை சீனாவுக்கு அளிப்பதை நிறுத்திய நிலையில், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சூப்பர் கணினியை அமைக்கும் சீனாவின் முயற்சிகளை தற்போது பைடன் அரசு தடுத்து நிறுத்தி வருவதாக நிபுணர்கள் தெரிவி்க்கின்றனர்.