பட்ஜெட்டில் எதாச்சும் நல்லது நடக்காதா ???
இந்தியாவில் 309 மாவட்டங்களில் லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு 37 ஆயிரம் பேரிடம் நடுத்தர குடும்பங்களின் வருவாய் மற்றும் சேமிப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 60 % மக்கள் தங்கள் வருவாய் 25% குறைந்ததுடன், சேமிப்பு குறைந்து வருவதாக தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஏதேனும் நல்ல அம்சம் வந்துவிடுமா என்று நிவாரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். கடந்தாண்டு நவம்பர் 25 முதல் கடந்த ஜனவரி 25 வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் வேலை இழப்பு அபாயம் அதிகரித்து வருவதால் அடுத்த 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை பொருளாதார நிலையற்ற தன்மை நிலவும் என்று 52% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த 37ஆயிரம் பேரில் 64% பேர் ஆண்கள், 36% பேர் பெண்கள், முதல் , இரண்டாம் தரம் மற்றும் சிறு நகரங்களிலும் இது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. வருமான வரி விகிதம் குறைக்க வேண்டும் என்றும், பிடித்தம் மற்றும் வரி சலுகைகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகவும் லோக்கல் சர்க்கிள்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. வரும் நிதியாண்டில் தங்கள் வீட்டு சேமிப்பு 56% நடப்பு நிதியாண்டில் குறையும் என்று அஞ்சுவதாகவும்,வெறும் 19% மக்கள் மட்டுமே தங்கள் சேமிப்பு உயரும் என்றும் தெரிவித்துள்ளனர். அடுத்த 3 மாதங்களுக்கு உள்ளாகவே பொருளாதார நிலையற்றதன்மை உருவாக அதிக வாய்ப்புள்ளதாக 23%பேர் கருதுவதாக கூறப்பட்டுள்ளது.