அமெரிக்கா,ஐரோப்பா,சீனாவைவிட இந்தியாதான் பெஸ்ட் எதுல தெரியுமா!!!
ஜி20 நாடுகள் எனப்படும் 20 நாடுகளின் கூட்டமைப்பின் மாநாட்டுக்கு இந்தியா இந்தாண்டு தலைமை ஏற்கிறது. இந்த மாநாட்டினை இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பு ஷெர்பா என்ற பதவியால் அழைக்கப்படுகிறது. இந்த ஷெர்பா பதவியை முன்னாள் நிதி ஆயோக் உறுப்பினர் அமிதாப்காந்த்துக்கு மத்திய அரசு அளித்துள்ளது. அமிதாப் காந்த் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் காந்த்,கடந்த 4 ஆண்டுகளில் இந்தியர்கள் வங்கிக்கணக்குகள் ஒரு சில நிமிடங்களில் திறந்துவிட முடிகிறது என்றும், பணப்பரிவர்த்தனைகள் அமெரிக்கா,சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட வேகமாக செய்கிறது என்றார். உலக பொருளாதாரத்தில் ஜி20 நாடுகளின் பங்களிப்பு மட்டும் 85% என்றார்.ஜி20 மாநாட்டைப் போலவே புதிய முயற்சியாக ஸ்டார்ட் அப் 20 என்ற பிரிவையும் அரசு துவங்கியுள்ளது. இதன்படி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் இந்த அமைப்பில் பங்கேற்று புதிய தொழில்களுக்கு முதலீடுகள் முதல் ஆலோசனைகள் வரை அளிப்பர்.