இந்தியாவின் நிதி பற்றாக்குறை இவ்வளவு அதிகரிப்பா?
இந்தியாவின் நிதி பற்றாக்குறை முதல் 9 மாதங்களில் 9 லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக அரசு புள்ளி விவரம் கூறியுள்ளது. எளிமையாக கூற வேண்டுமானால் நிதி பற்றாக்குறை 59.8%ஆக உயர்ந்துள்ளது இதற்கு முன்பு நிதி பற்றாக்குறை 50.4% ஆக இருந்தது.இந்தியாவின் வரவு 18.25 லட்சம் கோடி ரூபாயாகவும், ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மட்டும் அரசுக்கு செலவு 28.18 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. பல்வேறு வகைகளில் வரிகளாக மட்டும் 17.70 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாகவும், அதில் நேரடி வரியாக 15 லட்சத்து 56 லட்சம் கோடி ரூபாயாகவும், மறைமுக வரியாக 2 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயும் உள்ளன. வரி வருவாய் நேரடியாக 80%,மறைமுகமாக 79.5% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் பெட்ரோல்,டீசல் விலை மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததால் இந்த வீழ்ச்சி காணப்படுகிறது. ஆனால் விண்ட்பால் டேக்ஸ், ஜிஎஸ்டி வருவாய் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வரும் நிதியாண்டில் நிலைமை சீராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் செலவைப் பொறுத்தவரை, 3.51 டிரில்லியன் ரூபாயை உணவு,உரம் மற்றும் பெட்ரோலியத்துறைக்கு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் மானியமாக இவை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரவுகள் தெரிவிக்கின்றன