பெரிய ப்ளான் இருக்கும் போல!!!
பங்குச்சந்தைகளில் மிகவும் பிரபலமான பெயர் என்றால் அது வாரன் பஃப்பெட் மட்டுமே, அவரின் பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனம் 44.9மில்லியன் டாலர்கள் அளவுள்ள சீனாவின் BYD நிறுவன பங்குகளை விற்றுள்ளார். BYD நிறுவன பங்குகளில் 13.04%பங்குகளை வாரன் வைத்திருந்த சூழலில் தற்போது அது 12.9% ஆக சரிந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட்டில் இருந்து BYD நிறுவன பங்குகளை விற்று வரும் வாரன், தற்போது 3-ல் ஒரு பங்கு அளவை மட்டுமே வைத்துள்ளார்
225 மில்லியன் BYD பங்குகளை வாரன் கடந்த 2008ம் ஆண்டில் வாங்கியிருந்தார். byd நிறுவம் உலகின் மிகப்பெரிய ஹைப்ரிட் மற்றும் மின்சார கார்களை தயாரித்து வரும் நிறுவனமாகும். டெஸ்டா நிறுவனத்தை மிஞ்சும் வகையில் கடந்தாண்டு மட்டும் 18லட்சத்து 60 ஆயிரம் கார்கள் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்த்க்கது.