தங்கம் வாங்கவே முடியாது போல…
கடன்களுக்கான வட்டி விகிதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதன் எதிரொலியாக தங்கத்தின் விலை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இருந்த தங்கம் விலையைவிட 0.2% உயர்ந்த தங்கம்,ஒரு அவுன்ஸ் விலை 1,954 டாலராக உள்ளது.கடந்தாண்டு ஏப்ரலுக்கு பிறகு மீண்டும் தங்கம் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 9 மாதங்களில் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. பங்குச்சந்தைகள் பாதகமாக மாறிவிட்ட சூழலில் முதலீட்டாளர்களின் கவனம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகளின் கடன் விகிதங்கள் பக்கமே உள்ளன. ஐரோப்பா மற்றும் பிரிட்டன் வங்கிகள் தங்கள் கடன் வட்டி விகிதத்தை பூஜ்ஜியம் புள்ளி 50 புள்ளிகளை உயர்த்த திட்டமிட்டுள்ளன. தங்கத்தை போல வெள்ளியின் விலையும் 0.9%உயர்ந்துள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 24.19 டாலராக உள்ளது. பிளாட்டினம் விலை 0.8%உயர்ந்து ஆயிரத்து11.90 டாலராக அதிகரித்துள்ளது. சென்னையில் பிப்ரவரி 2ம் தேதி நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 44ஆயிர்தது 40 ரூபாயாக உயர்ந்துள்ளது.இது இன்னும் உயர வாய்ப்புள்ளதாக நகைக்கடை வைத்திருப்போர் கூறுவதால் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினருக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறிவிட்டது.