சந்தையில் அதானி குழுமத்திற்கு பலத்த அடி
ஹிண்டன்பர்க் அறிக்கையால் பாதிக்கப்பட்ட அதானி குழும நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளின் சந்தை மதிப்பு100பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்துவிட்டன. கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய தொழில் அதிபராக வலம் வந்த அதானி இத்தனை பெரிய சரிவுகளை இதற்கு முன்பு சந்திருக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.FPO எனப்படும் தொடர்பங்கு வெளியீடு மூலம் 20ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட முற்பட்ட அதானி குழுமம் ,திடீரென முதலீட்டாளர்கள் நலன்கருதி அதனை திரும்பப்பெறுவதாக அறிவித்து உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.நற்பெயரை மீட்டெடுக்க அதானி குழுமம் எடுத்த முயற்சி எதிர்வினையாற்றியதுபோல மாறிவிட்டது. வியாழக்கிழமை ஒரே நாளில் 10% சரிவுகளை அதானிகுழும பங்குகள் சந்தித்துள்ளன.உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து கவுதம் அதானி தற்போது அடுத்தடுத்த இடங்களில் சரிவை சந்தித்து 16வதுஇடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் சிக்கல்களால் அதிர்ந்து போயுள்ள அதானியின் சாம்ராஜ்ஜியம் அடுத்த அடியை கவனமாக எடுத்து வைக்க திட்டமிட்டு வருகிறது. புதன்கிழமை இரவில் நடந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் FPO திரும்பப்பெற திட்டமிடப்பட்ட நிலையில், ஏற்கனவே சரிவில் கிடந்த பங்குகள் மேலும் மதிப்பு சரிந்து அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டன