அதானிக்கு யார் யார் பணம் கொடுத்தீங்க….
அதானி குழுமத்துக்கு எத்தனை கோடி கடனை யார் யார் தந்துள்ளீர்கள் என ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கேட்டுள்ளது. அதுவும் தாமாக முன்வந்து கேட்கவில்லை, அமெரிக்காவில் இருந்து ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் 2 ஆண்டுகள் அதானி குழுமம் பற்றி ஆராய்ந்த பிறகு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அதானி குழுமத்தின்மீது வைத்த பிறகு ரிசர்வ் வங்கி இந்த கேள்வியை கேட்டுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை இந்த வங்கிகள் விவரங்களை கேட்டதாகவும், புதன்கிழமையே இதற்கான தரவுகளை தங்கள் தரப்பில் இருந்து தந்துவிட்டதாகவும் தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளனர். இந்த தரவுகளின் மொத்த விவரம் தற்போது கசிந்துள்ளது. அதாவது அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்கள் மொத்தமாக 80 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக அளித்துள்ளனர்.இது அந்த குழுமத்தின் மொத்த கடனில் 38% ஆகும்.அதானி குழுமத்தில் உள்ள அதானி என்டர்பிரைசர்ஸ்,அதானி பேர்ட்ஸ்,அதானி பவர்,அதானி கிரீன்,மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் என்ற 5 நிறுவனங்கள் மட்டும் இந்தியாவில் மட்டும் 2.1டிரில்லியன் கடன் பெற்றுள்ளதாக 2022 தரவுகள் தெரிவிக்கின்றன.இண்டஸ் இன்ட் வங்கி மட்டும் 0.49% கடனை அதானி குழும நிறுவனங்களுக்கு அளித்துள்ளது.பாரத ஸ்டேட்வங்கியும்,பஞ்சாப் நேஷனல் வங்கியும், ரிசர்வ்வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டே கடனை அளித்துள்ளதாக ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டும் 7ஆயிரம் கோடி ரூபாயை கடனாக அதானி குழுமத்துக்கு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்