அன்றே கணித்தார் ராகுல்காந்தி:திக்விஜய் சிங்
அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தது குறித்து ராகுல்காந்தி அன்றே கணித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். தொழிலதிபர்களுக்கு பாஜக உதவுவதாக கூறிய அவர், கொரோனா காலகட்டத்தில் மக்களிடம் பணம் இல்லாமல் தவித்ததனர் என்றும் ஆனால் சில தொழிலதிபர்களுக்கு மட்டும் பணம் கொட்டியது எப்படி என்று திக்விஜய சிங் கேள்வி எழுப்பி்யுள்ளார். அதானி குழும பங்குகளை வாங்கியவர்களுக்கு நஷ்டம் மட்டுமே மிச்சம் என்று கூறியுள்ள திக்விஜய், எஸ்பிஐயில் குறைந்த அளவே பணம் அதானி குழுமத்துக்கு சென்றதாக கூறினாலும் எல்ஐசி என்பது பொதுமக்களின் பணம் அது பெரிய சரிவை சந்தித்து உள்ளதாகவும் திக் விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கு வரி சலுகைகள் கிடைப்பதாகவும்,அவர்கள் வருவாய் அதிகரிப்பதாகவும் சாடிய திக்விஜய், இதே பாணியில் தான் அதானி குழுமமும் பலனடைந்துள்ளதாக சாடினார். அதானி குழுமத்தின் செல்வம் என்ற குமிழி வெடித்துவிடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்பே கணித்தாகவும் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.